உலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு… மனிதர்கள் சென்றால் அதோகதிதான்!


பிரேஸில் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் சுமார் 4,30,000 ச.மீ. பரப்பளவுள்ள ஒரு தீவு உண்டு.
Ilha da Queimada Grande என்றழைக்கப்படும் இந்த தீவில் பாம்புகள் எண்ணிலடங்காத அளவில் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.
உலகில் மனிதர்கள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் இந்தத் தீவும் ஒன்று என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இந்தத் தீவில் ஒவ்வொரு சதுர அடியிலும் ஒரு பாம்பையாவது பார்க்கக் கூடியவாறு இருக்கின்றது.
கோல்டன் பிட் வைப்பர் என்று கூறப்படும் பாம்புகளே இந்கு அதிகளவில் காணப்படுகின்றன.

இந்தத் தீவிலுள்ள பாம்புகளைப் பாதுகாப்பதற்காக குறித்த பாம்புத் தீவு மூடி வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களால் இவற்றிற்கு ஆபத்து வரக்கூடும் என்றே இங்கு யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்று பிரேஸிலில் உள்ள கப்பற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீவிற்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டும் என்றால் சிறப்பனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்பார்கள். அந்த வகையில் ஒரு பாம்பைக் கண்டாலே நடுங்கும் சந்தர்ப்பத்தில், பாம்புகளுக்கென்றே ஒரு தீவு, அதில் பாம்புகள் மட்டுமே வாழும் என்று கூறப்படுகின்றது. இதைப் படித்தவுடனேயே சிலர் நடுங்கியிருக்கக்கூடும்.

thanks to : http://www.ulkuththu.com/38456

உலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு… மனிதர்கள் சென்றால் அதோகதிதான்! Rating: 4.5 Diposkan Oleh: Unknown